TNPSC Thervupettagam

இந்தியாவின் வேலை நிலை குறித்த அறிக்கை

May 20 , 2021 1518 days 659 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வேலை நிலை குறித்த அறிக்கையானது கர்நாடகாவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஏற்பட்ட கோவிட்-19  பெருந்தொற்றானது இந்த ஒரு வருடத்தில் வேலை, வருமானம், சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவை மீது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி இந்த வருடாந்திர அறிக்கையானது ஆவணப் படுத்தியுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி,
    • இந்த பெருந்தொற்றானது மக்களை முறையான வேலையை விட்டு ஒரு சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வேலையை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளி அவர்களின் வருமானத்தையும் குறைத்துள்ளது.
    • கடந்த ஆண்டில் வறுமை நிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் தான் அதிகளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்