TNPSC Thervupettagam

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கை

March 5 , 2022 1249 days 554 0
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கையானது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவினால் வெளியிடப்பட்டது.
  • பசியின்மை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, பாலினச் சமத்துவம் மற்றும் நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட 11 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் நிறைந்துள்ள கணிசமான சவால்களினால் இந்தியாவின் தரவரிசை குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியா, கடந்த ஆண்டிலிருந்த 117வது இடத்திலிருந்து 3 இடங்கள் சரிந்து 120வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் ஒட்டு மொத்த நிலையான மேம்பாட்டு இலக்குகளின் மதிப்பு 100-க்கு 66 ஆகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்குக் குறைந்த அளவே தயாராக உள்ள மாநிலங்களாக ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • மேலும், மாநிலங்கள் பிரிவில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்கள் பிரிவில் சண்டிகர் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்