இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் நிலை 2026 - அறிக்கை
June 2 , 2026 12 days 133 0
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார நிலை (SIDE) 2026 எனும் அறிக்கையை இணையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ICRIER-Prosus மையம் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை முந்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் 5வது இடத்திற்கும், தனித்துவமான AI (செயற்கை நுண்ணறிவு) செயல்திறனில் 4வது இடத்திற்கும் இந்தியா முன்னேறி உள்ளது.
டிஜிட்டல் மூலம் வழங்கப்படும் வர்த்தகத்தில் இந்தியா 328 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது என்றும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) திறமையாளர்களைக் கொண்டு உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய AI பயனர்களில் 72% பேர் தற்போது வளரும் நாடுகளில் உள்ளனர் என்பதை இது கண்டறிந்துள்ளது என்ற நிலையில் இது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உருவாக்கத் திறன் கொண்ட AI வேகமாகப் பரவுவதைக் காட்டுகிறது.
முதல் ஐந்து டிஜிட்டல் பொருளாதாரங்களில் சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரம் மூன்று துருவ நிலையை அடைந்து வருகிறதுடன், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.