TNPSC Thervupettagam

பாலியல் வன்முறை குறித்த ஐநா அறிக்கை 2026

June 1 , 2026 13 days 137 0
  • மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் தரப்புகளின் 2026 ஆம் ஆண்டிற்கான ஐநாவின் (UN) தடைப் பட்டியல்/கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல் மற்றும் ரஷ்யா சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் கைதிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் உக்ரைன் மோதலின் போது நடந்தவை உட்பட, 2025 ஆம் ஆண்டில் மோதல் பகுதிகளில் நடந்த சரிபார்க்கப்பட்ட பாலியல் வன்முறை வழக்குகளை ஐநா அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளவில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகளாக கிட்டத்தட்ட 10,000 வழக்குகளை இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
  • இந்தக் தடைப்பட்டியல் / கறுப்புப் பட்டியலானது மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளைக் கண்காணிக்கும் ஐநாவின் வருடாந்திர கண்காணிப்பு பொறி முறையின் ஒரு பகுதியாக உள்ளதோடு மேலும் இது பொறுப்புக்கூறல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்