இந்தியாவின் தனியார் துறை ஹெலிகாப்டர் ஒருங்குசேர்ப்பு பிரிவு
October 4 , 2025 14 days 50 0
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனமானது, கர்நாடகாவின் வேமகல் பகுதியில் இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி கட்ட ஒருங்குசேர்ப்பு வசதியினை நிறுவ உள்ளது.
இந்தப் பிரிவானது ஏர்பஸ் H125 ஹெலிகாப்டரை தயாரிக்கும்.
இது பொது மற்றும் பொது தனியார் என இரு துறைகளையும் சார்ந்த சந்தைகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், இந்திய ஆயுதப்படைகளின் குறிப்பாக இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்காக இலகுரக பல் பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
இந்த வசதியானது, உயர் மட்ட அளவிலான உள்நாட்டு உற்பத்திக் கூறுகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய H125M ஹெலிகாப்டரின் இராணுவப் பயன்பாட்டு வடிவினைத் தயாரிக்கும்.
தெற்காசியா முழுவதும் ஹெலிகாப்டர்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களுடன், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' H125 ஹெலிகாப்டரின் முதல் விநியோகமானது, 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது TASL நிறுவனத்தினை, ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாக மாற்றுகிறது என்பதோடு மேலும் இது குஜராத்தில் உள்ள C295 இராணுவ விமானங்களுக்கான அதன் தற்போதைய வான் வழி வாகன ஒருங்குசேர்ப்பு தொடரைப் பூர்த்தி செய்கிறது.