நீதித்துறை அமைப்பில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
வழக்கு மேலாண்மை, சட்ட ஆராய்ச்சி மற்றும் நீதிமன்றங்களில் தாமதங்களைக் குறைப்பதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பதை இது விளக்குகிறது.
SUPACE (உச்ச நீதிமன்றத்தின் செயல்திறன் உதவிக்கான உச்ச நீதிமன்ற வலை தளம்), SUVAS (உச்ச நீதிமன்ற விதிக் அனுவாத் மென்பொருள்), TERES (மின்னணு பதிவு மற்றும் உரையின் படியெடுத்தல்) மற்றும் LegRAA (சட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு உதவி) போன்ற கருவிகள் இந்தியாவின் முக்கிய நீதித்துறை செயற்கை நுண்ணறிவு அமைப்புகளாகச் செயல்படுகின்றன.
தவறான வெளியீடுகள், தரவுத் தனியுரிமைச் சிக்கல்கள் மற்றும் சார்பு மிக்க வழி முறைகள் போன்ற அபாயங்கள் குறித்தும் இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
நீதிபதிகள் இறுதி முடிவெடுப்பவர்களாக இருப்பதை உறுதி செய்யவும், நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இது விதிகளை அமைக்கிறது.