இந்தியாவின் பருவநிலைப் பேரிடர்கள் மற்றும் பாதிப்பு நிலை வரைபடம்
January 21 , 2022 1280 days 500 0
CRS என்ற அமைப்பின் அறிவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தியாவின் பருவ நிலைப் பேரிடர்கள் மற்றும் பாதிப்பு நிலை வரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.
CRS என்பது இந்திய வானிலைத் துறையின் கீழ் செயல்படுகின்ற ஒரு பருவநிலை ஆராய்ச்சி மற்றும் சேவை அமைப்பாகும்.
14 தீவிரமான வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒரு பகுதி (உள்ளூர்) மக்களின் மீதும் அவர்களின் பொருளாதார நிலை மீதும் இந்த 14 வித வானிலை நிகழ்வுகள் ஏற்படுத்திய இடர்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் அவர்கள் கணக்கில் கொண்டனர்.
இங்கே 'உள்ளூர்' என்பது மாவட்டத்தைக் குறிக்கின்றதே அன்றி அது மாநிலத்தையோ கிராமத்தையோ குறிப்பது அல்ல.