2021 ஆம் ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம்
January 21 , 2022 1281 days 552 0
2021 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமானது 125 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.
சீனாவிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதியின் மதிப்பானது 100 பில்லியன் டாலராக இருந்தது.
இயந்திர சாதனங்களுக்குத் தான் அதிகப்படியான இறக்குமதி தேவைகள் இருந்தன.
2021 ஆம் ஆண்டில் சீனாவுடன் 69.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வர்த்தகப் பற்றாக்குறையினை இந்தியா எதிர்கொண்டது.
இது 2019 ஆம் ஆண்டில் எதிர்கொண்டதை விட 22% அதிகமாக இருந்தது.
2021 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவானது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒட்டு மொத்த வர்த்தக அளவைத் தாண்டியது.
2021 ஆம் ஆண்டில் சீனாவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியப் பொருட்கள் பருத்தி, இரும்பு தாது, மற்றும் மூலப்பொருள் சார்ந்த பொருட்கள் ஆகியன ஆகும்.
மின் இயந்திரங்கள், இயந்திரச் சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற மருத்துவ உபகரணங்கள், வீரியமிக்க மருந்து பொருட்கள், குறைகடத்தி சாதனங்கள், மின்கலங்கள் போன்றவை அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.