இந்தியாவின் மிக வயதான தேனுண்ணுங்கரடி
January 15 , 2022
1217 days
628
- வன் விஹார் தேசியப் பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் உள்ள இந்தியாவின் மிக வயதான பெண் தேனுண்ணுங்கரடியானது உயிரிழந்தது.
- இந்தப் பூங்காவானது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் அமைந்து உள்ளது.
- 40 வயதான இந்த கரடியின் பெயர் குலாபோ ஆகும்.
- இவை இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மிர்மெகோபாகஸ் (myrmecophagous) என்ற ஒரு கரடி இனத்தைச் சேர்ந்தவையாகும்.
- வாழ்விடச் சீரழிவு மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவற்றின் காரணமாக, இவை IUCN சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனங்கள் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- நீண்ட கீழ் உதடு மற்றும் அண்ணத்தைக் கொண்டுள்ளதால் இவை "லேபியேடட் பியர்" (labiated bear) என்றும் அழைக்கப்படுகிறன..
- உலகளவில் இந்தியா, பூடான் மற்றும் இலங்கையின் மிதவெப்பப் பருவநிலை மண்டலங்கள் மற்றும் நேபாளத்தின் தராய் பகுதி ஆகியவற்றில் இவை பரவலாக காணப் படுகின்றன.

Post Views:
628