இந்தியாவின் மிகப்பெரிய புவி வெப்ப ஆற்றல் முதன்மைத் திட்டம்
November 10 , 2025 11 days 95 0
எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனமானது, ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியாவின் மிகப்பெரிய புவி வெப்ப ஆற்றல் தொழில்நுட்ப (GET) முதன்மைத் திட்டத்தை நிறுவ அங்கீகரித்துள்ளது.
சுற்றுலாத் துறையின் கீழ் அரக்குப் பள்ளத்தாக்கு மற்றும் விசாகப்பட்டினத்தில் என இரண்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
புவி வெப்ப ஆற்றல் அமைப்புகள் திறம் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வெப்ப மாக்கல் மற்றும் குளிரூட்டலுக்கு நிலையான நிலத்தடி வெப்பநிலையைப் பயன்படுத்துகின்றன.
அவை மின்சாரப் பயன்பாட்டைக் கிட்டத்தட்ட 50% குறைத்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம்.
இந்த முதன்மைத் திட்டம் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், இந்தியா முழுவதும் நிலையான மேம்பாட்டிற்கான ஒரு பிரதிபலிப்பு மாதிரியை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.