இந்தியாவின் முதலாவது என்ஜினல்லாத இரயில் வண்டி -Train 18
October 26 , 2018 2613 days 9742 0
இந்தியாவின் முதல் என்ஜினல்லாத இரயில்வண்டியான Train 18, அக்டோபர் 29ம் தேதியன்று பரிசோதனைகளுக்காக சோதிக்கப்பட உள்ளது. இது 30 வருடமாக உள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் வண்டிக்கு மாற்றாக கருதப்படுகின்றது.
இந்த பளபளப்பான புதிய வண்டி 100 சதவிகிதம் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் (Integral Coach Factory - ICF) தயாரிக்கப்பட்டது.
முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட இந்த இரயில் வண்டி சதாப்தியின் வேகமான மணிக்கு 130 கிலோ மீட்டர் என்பதைவிட அதிகமாக 15 சதவிகிதம் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் விதத்தில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் வசதியைப் பெற்றிருக்கின்றது.
இந்த (Train 18) வண்டியின் பயணப் பெட்டிகள் LED விளக்குகளோடு பொருத்தப்பட்டு ஆற்றல் திறன் வாய்ந்ததாக உள்ளதோடு மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் வண்டிகளில் உள்ளதைப் போல இந்த வண்டி தன்னிச்சையாக உந்தப்படும் வசதியுடைய என்ஜினல்லாத இரயில் வண்டி ஆகும்.