- சிட்வி துறைமுகம், பலெட்வா உள்நாட்டு நீர்முனையம் ஆகியவற்றை இயக்குதல் & பராமரித்தல் (O&M / Operation and Maintenance) மற்றும் கலாதான் பல்மாதிரிப் போக்குவரத்து திட்டத்தில் உள்ளடங்கிய வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக தனியார் துறைமுக செயல்பாட்டாளர்களை நியமிப்பதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
- மியான்மரில் உள்ள சிட்வி துறைமுகமானது நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு இந்தியப் பகுதியை வங்காள விரிகுடாவோடு மிசோரம் வழியாக இணைக்கிறது.
- இது கொல்கத்தாவிற்கு மாற்றுவழி ஒன்றை வழங்குகிறது. மேலும் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமான முன்னெடுப்பாக உள்ளது.
கலாதான் பல்வழி போக்குவரத்து திட்டம்
- இந்தத் திட்டமானது இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் துறைமுகமான சிட்வியுடன் கடல் வழியாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பின்னர் சிட்வி துறைமுகத்திலிருந்து மியான்மரின் லாஷியோ பகுதியை கலாதான் ஆற்றுப்படகு பாதை வழியாகவும் லாஷியோவிலிருந்து மிசோரம் (இந்தியா) வரையிலான தூரத்தை சாலைப் போக்குவரத்து வழியாகவும் இத்திட்டம் இணைக்கிறது.
- இந்தத் திட்டமானது கொல்கத்தாவிலிருந்து மிசோரம் வரையில் கிட்டத்தட்ட 1000 கி.மீ. தொலைவு பயணத்தைக் குறைத்து 3-4 நாட்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது.