உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குக்ரைல் இரவு நேர உலா திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது இந்தியாவின் முதல் இரவு நேர உலா மற்றும் இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு நேர உலா எனக் குறிப்பிடப்படுகிறது.
சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா மற்றும் இந்தோனேசியாவிற்குப் பிறகு, இது உலகின் ஐந்தாவது திட்டமாகும்.
இதற்கு மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம் (CZA) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்தக் காட்டில் குக்ரைல் கரியால் மறுவாழ்வு மையமும் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் முதல் கரியால் பாதுகாப்பு மையமாகவும் திகழ்கிறது.
மிகவும் அருகி வரும் இனமான கரியால்களைப் பாதுகாப்பதற்காக இது 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தியாவில் இரவு நேர உலாக்கள், மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தின் இரவு நேர உலா வழிகாட்டுதல்கள் மற்றும் 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகின்றன.
மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம் என்பது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களை ஒழுங்குபடுத்தும் சட்டப்பூர்வ அமைப்பாகும்.