இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரையிறக்க சோதனை - ஏர்பஸ் A320
July 6 , 2026 2 days 98 0
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ககன் (GAGAN) வழிசெலுத்தல் அமைப்பைப் பயன்படுத்தி உதய்பூர் விமான நிலையத்தில் ஏர்பஸ் A320 விமானத்தில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரையிறக்க அமைப்பு (SLS) அணுகு முறைச் சோதனையை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மேற்கொண்டது.
இந்தச் சோதனையானது, இண்டிகோ ஏர்பஸ் A320 விமானம் ஒன்று துல்லியமாகத் தரையிறங்குவதற்காக, செங்குத்து வழிகாட்டுதலுடன் கூடிய இடங்காட்டி செயல்திறன் (LPV) அணுகுமுறையை மேற்கொள்ள உதவியது.
ககன் (GAGAN – GPS உதவியுடனான புவிசார் விரிவாக்கப்பட்ட வழிகாட்டுதல்) என்பது இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான மேம்படுத்தும் அமைப்பாகும் (SBAS).
இது இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
புவிநிலைச் செயற்கைக்கோள்கள் மூலம் திருத்தத் தரவை அனுப்புவதன் மூலம் GPS சமிக்ஞைகளின் துல்லியம், ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை இது மேம்படுத்துகிறது.
இந்த அமைப்பு தரை அடிப்படையிலான கருவி தரையிறக்க அமைப்புகளைச் (ILS) சார்ந்திருப்பதைக் குறைக்கிறது மற்றும் குறைந்த உள்கட்டமைப்பு உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கும் திறனை மேம்படுத்துகிறது.