தேசிய அனல் மின் கழகம் மற்றும் குஜராத் எரிவாயு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் கலப்புத் திட்டத்தினை சூரத்தில் தொடங்கி உள்ளன.
சூரியசக்தி அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, நீரியல் மின்னாற் பகுப்பு முறை மூலம் இந்தப் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஆனது, முதலில் பசுமை ஹைட்ரஜனை குழாய் வழி இயற்கை வாயுவுடன் (PNG) அதன் மொத்த கன அளவில் 5% கலப்பிற்கு அனுமதி அளித்துள்ளது.
பின் கலவையின் அளவு படிப்படியாக அதிகரிக்கப் பட்டு 20% என்ற அளவினை எட்டும்.