இந்தியாவின் முதல் பிரத்தியேக இராணுவ மருத்துவத் துறை
August 7 , 2026 6 days 62 0
இது லக்னோவில் உள்ள மத்திய கட்டளை மையத்தின் கட்டளை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது.
இது இராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டது.
போர் மருத்துவத் தயார்நிலை, போர்க்கள அதிர்ச்சி சிகிச்சை, மனநல மருத்துவம், சுற்றுச்சூழல் மருத்துவம், மருத்துவ தளவாடங்கள் ஆகியவை இதன் முக்கியக் கவனங்களாக இருக்கும்.
இந்த மையம் முதலில் கல்வித் திட்டங்களுடன் தொடங்கி, பின்னர் HADR மற்றும் CBRNE பாதுகாப்புக்கான சிறப்பு மையங்களாக விரிவுபடுத்தப்படும்.
HADR – மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்;
CBRNE – இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் அதிக ஆற்றல் கொண்ட வெடிபொருட்கள்.
சிறப்பு மையங்களும் உலகளாவிய இராணுவ மருத்துவ மையமும் ரக்ஷா வியூக தொலைநோக்குப் பார்வை 2026-30-ஆம் ஆண்டின் கீழ் உள்ளன.
இது உள்நாட்டு கோட்பாடுகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சுகாதார கண்காணிப்பு, மீள்திறன் மற்றும் போர்க்கள மருத்துவத்தில் புதுமைகளை வலுப்படுத்துகிறது.