பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கமானது (BNHS), இந்தியாவின் முதல் மீனவர்களால் வழிநடத்தப்படும் ஆக்கிரமிப்பு மீன்களை அகற்றும் மற்றும் உள்நாட்டு மீன் இனங்களை மீட்டெடுக்கும் திட்டத்தை மகாராஷ்டிராவின் உஜானி நீர்த்தேக்கத்தில் தொடங்கியுள்ளது.
இத்திட்டமானது ஆக்கிரமிப்பு இனங்களான உறிஞ்சுவாய் கெளுத்தி, திலேப்பியா மற்றும் ஆப்பிரிக்கக் கெளுத்தி ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த அந்நிய மீன்கள் உள்நாட்டு மீன்களின் பல்லுயிர்த் தன்மையையும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளன.
ஆக்கிரமிப்பு மீன்களை அகற்றுவது மற்றும் நீர்த்தேக்கத்தில் உள்நாட்டு மீன் இனங்களை மீட்டெடுப்பது ஆகியவை இம்முயற்சியில் அடங்கும்.