TNPSC Thervupettagam

இந்தியாவின் மேற்கூரை சூரியசக்தி திட்டம்

June 2 , 2026 12 days 122 0
  • 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தால் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி வீட்டு வசதி விரிவாக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
  • இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று தொடங்கப்பட்டது என்ற நிலையில் இதுவே உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மேற்கூரை சூரியசக்தித் திட்டமாகும்.
  • இத்திட்டம் குடியிருப்புகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கு 40% வரை மானியங்களை வழங்குகிறது.
  • வீடுகளில் நிறுவும் அமைப்பின் திறனைப் பொறுத்து, ₹30,000 முதல் ₹78,000 வரை மானிய உதவி பெறலாம்.
  • இத்திட்டம் 30 கிகாவாட் (GW) மேற்கூரை சூரியசக்தி திறனை சேர்க்கும் என்றும், அடுத்த 25 ஆண்டுகளில் 1,000 பில்லியன் யூனிட் (BU) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 720 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு (CO) உமிழ்வைக் குறைக்கும் மற்றும் சுமார் 17 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்