TNPSC Thervupettagam

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறன் 2025

July 20 , 2025 3 days 35 0
  • இந்தியா அதன் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் சுமார் 50 சதவீதத்தினைப் புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்களிலிருந்து உற்பத்தி செய்துள்ளது.
  • இது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDCs) நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாக இருந்தது.
  • ஜூன் 30 ஆம் தேதி நிலவரப் படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறன் 484.82 GW ஆகும்.
  • இது வெப்ப ஆற்றல் மூலங்களிலிருந்து 242.04 GW (49.9%) மற்றும் புதைபடிவம் சாரா மூலங்களிலிருந்து 242.78 GW (50.1%) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெரும் நீர் ஆற்றல் மற்றும் அணுசக்தி ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 2021 ஆம் ஆண்டு ஐக்கியப் பேரரசின் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 பருவநிலை மாநாட்டில், இந்தியா அதன் NDC இலக்குகளின் கீழ், 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவம் சாரா எரிபொருள் வளங்களிலிருந்து அதன் ஒட்டுமொத்த மின்சாரத் திறனில் 50% இலக்கினை அடையும் நோக்கினை அறிவித்தது.
  • 500 ஜிகாவாட் (GW) அளவிலான புதைபடிவம் சாரா மின்சாரத் திறனை நிறுவுதல், திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் குறைத்தல் மற்றும் 2030 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வுச் செறிவினை 45% குறைத்தல் ஆகியவை பிற இலக்குகளாகும்.
  • உலகளவில் மிகக் குறைந்த தனிநபர் உமிழ்வுகளில் ஒன்றாக இருந்த போதிலும், தங்கள் NDC உறுதிமொழிகளை நிறைவேற்றும் - அல்லது அதை விட அதிகமாக வழங்கும் சில G20 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • இந்தியா 2025 ஆம் ஆண்டில் அதன் புதிய மற்றும் மிகவும் இலட்சிய நோக்கமிக்க NDC இலக்கினை சமர்ப்பிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்