TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா (PM-DDKY)

July 20 , 2025 3 days 62 0
  • 2025 முதல் 2031 ஆம் ஆண்டு வரை 100 வேளாண் மாவட்டங்களை இலக்காகக் கொண்ட பிரதான் மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா (PM-DDKY) என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • குறைந்த செயல்திறன் கொண்ட பகுதிகளில் உற்பத்தித் திறன், நீர்ப் பாசனம், சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகியவற்றை நன்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட, இந்தத் திட்டத்திற்காக 6 ஆண்டுகளுக்கு 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • இது உயர் இலட்சிய மிக்க மாவட்டங்களின் திட்ட மாதிரியைப் பின்பற்றுகிறது மற்றும் மாநில, மாவட்ட மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் 11 அமைச்சகங்களில் 36 திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
  • மாவட்டங்கள் சார்ந்த குறிப்பிட்ட வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான DDKY சமிதியின் கீழ் உருவாக்கப் படும்.
  • நிதி ஆயோக் அமைப்பின் உத்தி சார் வழிகாட்டுதலை வழங்குவதுடன், ஒரு மையக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு வழியாக 117 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி இதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்