இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரநிலைகள் 2025
June 19 , 2025 15 days 71 0
இந்திய நாடானது, சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பினால் (ICAO) அதன் செயல்பாடுகள் மற்றும் விமானத் தகுதியின் அடிப்படையில் உலக சராசரியை விட மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
செயல்பாடுகள் சார்ந்த பிரிவில் இந்தியா உலகளாவியச் சராசரியை விட மிக அதிக மதிப்பெண் பெற்றது.
உலகளாவியச் சராசரியானது 72.28 சதவீதமாகவும், இந்தியாவின் மதிப்பெண் என்பது 94.02 சதவீதமாகவும் இருந்தது.
இது 2024 ஆம் ஆண்டு தணிக்கைகளின் படி அமெரிக்கா (86.51 சதவீதம்) மற்றும் சீனா (90 சதவீதம்) போன்ற நாடுகளை விட அதிகமாக இருந்தது.
இந்தியாவும் விமானத் தகுதியின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிக மதிப்பெண் பெற்றது என்பதோடு இந்த இரு நாடுகளும் முறையே 89.13 சதவீதம் மற்றும் 94.83 சதவீதம் மதிப்பை பெற்றன.
இந்திய விமானச் சேவையின் கடைசித் தணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான தணிக்கைகள் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன.
அமெரிக்க கூட்டாட்சி விமான நிர்வாகம் (FAA) ஆனது இந்தியாவின் சர்வதேச விமானப் பாதுகாப்பு மதிப்பீட்டு வகையை முதல் வகையாக (Category 1) தக்க வைத்து அறிவித்து உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவானது மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக உள்ளது.