TNPSC Thervupettagam

விஷ்ணு திட்டம்

June 19 , 2025 15 days 85 0
  • இந்தியா தனது மிகவும் மேம்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்படும், நீட்டிக்கப்பட்ட எறிவு வரை கொண்ட நீண்ட காலத்தியச் செயல்பாட்டு அம்சம் கொண்ட அதிமீயொலி சீர்வேக எறிகணையை (ET-LDHCM) பரிசோதிக்கத் தயாராகி வருகிறது.
  • ET-LDHCM ஆனது 8 மேக் (தோராயமாக 11,000 கிமீ/மணி) என்ற மிகவும் அதிகபட்ச வேக வரம்பினைக் கொண்டுள்ளது.
  • இது சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் உட்பட எதிரிகளது பிரதேசத்தின் உட்புறப் பகுதிகளில் மிகவும் விரைவான மற்றும் பேரழிவு தரும் தாக்குதல்களை மேற் கொள்ளக் கூடியது.
  • இந்தத் திறனுடன், அதிமீயொலி ஆயுதத் தொழில்நுட்பத்தில் செயல்பாட்டு ரீதியான வெற்றியை அடைந்த அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் ஒரு குழுவில் இந்தியா இணைகிறது.
  • இந்த எறிகணையானது, சுமார் 1,500 கிலோ மீட்டர் வரம்பில் 1,000 முதல் 2,000 கிலோ வரையிலான எடையுள்ள வெடிபொருள்களைச் சுமந்து செல்ல முடியும்.
  • ஒரு ஸ்க்ராம்ஜெட் எஞ்சினால் இயக்கப் படுகின்ற  இது வளிமண்டல ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி அதிமீயொலி வேகத்தைக் கொண்டு மிக நீண்ட நேரத்திலான வான்வழிச் செயல்பாட்டுப் பயண நேரத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்