TNPSC Thervupettagam

இந்தியாவின் வேளாண்மைப் பொருளாதாரத்தின் விரிவாக்கம்

August 18 , 2026 13 hrs 0 min 14 0
  • கடந்த பத்தாண்டுகளில், அதிகரித்த விவசாய உற்பத்தி, விவசாயிகளுக்கான கூடுதல் ஆதரவு, நிறுவன ரீதியிலான கடன் வசதிகள் எளிதாகக் கிடைத்தல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் நிலையான விவசாய முறைகளை அதிகளவில் பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் குறிப்பிடத் தக்க வளர்ச்சியைப் கண்டுள்ளன.
  • இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறை, நாட்டின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 46.1 சதவீதத்தினருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் 'மொத்த மதிப்பு கூடுதல்' (Gross Value Added) மதிப்பானது, 2014-15-ஆம் ஆண்டில் ரூ. 20.94 லட்சம் கோடியாக இருந்த நிலையில் இருந்து, 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 52.08 லட்சம் கோடியாக (மதிப்பீடு) உயர்ந்துள்ளது.
  • அதேபோல, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கான நிதிநிலை ஒதுக்கீடும் 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 27,663 கோடியாக இருந்ததிலிருந்து, 2026-27-ஆம் ஆண்டில் ரூ. 1,40,528.78 கோடியாக அதிகரித்துள்ளது.

அதிக உற்பத்தியை அறுவடை செய்தல்

  • மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2013-14-ஆம் ஆண்டில் 265.05 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2025-26-ஆம் ஆண்டில் 376.56 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
  • இதே காலக் கட்டத்தில், தோட்டக்கலை உற்பத்தி 280.70 மில்லியன் டன்னிலிருந்து 377.78 மில்லியன் டன்னாக (மதிப்பீடு) உயர்ந்துள்ளது.
  • அதேவேளையில், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 2014-15-ஆம் ஆண்டில் 27.51 மில்லியன் டன்னிலிருந்து 2025-26-ஆம் ஆண்டில் 43.06 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
  • PM-KISAN போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கான நேரடி ஆதரவும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ், 2016-17-ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 92.46 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் விண்ணப்பங்களுக்குக் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
  • பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது; உலகளாவிய உற்பத்தியில் ஏறக்குறைய 25 சதவீதப் பங்கை இந்தியா கொண்டுள்ளது.
  • கோழி மற்றும் இறைச்சி உற்பத்தியும் அதிகரித்துள்ளது; முட்டை உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவும் இரண்டாவது இடத்தையும், இறைச்சி உற்பத்தியில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்