இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கம்மை நோய் பரிசோதனைக் கருவி
August 23 , 2022 1086 days 452 0
ஆந்திரப் பிரதேச மருத்துவத் தொழில்நுட்ப மண்டலம் ஆனது சமீபத்தில் குரங்கம்மை நோயினைப் பரிசோதிப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது RT-PCR கருவியை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கருவியின் உதவியுடன், இந்தத் தொற்றுநோயை விரைவாகக் கண்டறியலாம்.
இந்தக் கருவியை டிரான்ஸான்சியா எர்பா பயோமெடிக்கல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
டிரான்ஸான்சியா எர்பா பயோமெடிக்கல்ஸ் நிறுவனத்தின் RT-PCR கருவி அதிக உணர் திறன் கொண்டது.
ஜூலை 14 ஆம் தேதியன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், இந்தியாவில் முதல் முறையாக குரங்கம்மை நோய்ப் பாதிப்பு பதிவானது.