பாரம்பரிய அறிவுசார் தகவல்களுக்கான டிஜிட்டல் நூலகத்தின் (TKDL) தரவுத் தளம்
August 22 , 2022 1084 days 490 0
காப்புரிமைப் பெற்ற அலுவலகங்களைத் தவிர, இதரப் பயனர்களும் அணுகும் வகையில் பாரம்பரிய அறிவுசார் தகவல்களுக்கான டிஜிட்டல் நூலக தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் ஆனது புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் பாரம்பரிய அறிவுசார் தகவல்களைத் தற்போதைய நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து அதனை இணைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்தத் தரவுத்தளம் ஆனது அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை மேம்படுத்த செய்வதற்காக பாரம்பரிய அறிவுசார் தகவல்களின் முக்கிய ஆதாரமாக செயல்படும்.
இந்தத் தரவுத்தளத்தை கட்டணம் அடிப்படையிலான ஒரு சந்தா மாதிரி மூலம் அணுக இயலும்.
இது ஒவ்வொரு கட்டமாக தேசிய மற்றும் சர்வதேசப் பயனர்களுக்காக அனுமதிக்கப் படும்.
பாரம்பரிய அறிவுசார் தகவல்களுக்கான டிஜிட்டல் நூலகம் ஆனது 2001 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.