வேளாண் கடன்களுக்கான வட்டி மானியம்
August 21 , 2022
1084 days
480
- குறுகிய கால வேளாண் கடன்களுக்கான வட்டி மானியத்தை மீண்டும் அறிமுகப் படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதில் 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால வேளாண் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- இந்தத் தொகையானது 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
- கிராமப் பொருளாதாரத்தில் போதுமான வேளாண் கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விவசாயிகள் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை வங்கியில் செலுத்துவதை உறுதி செய்வதற்காக வட்டி மானியத் திட்டம் அரசினால் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என மறு பெயரிடப் பட்டுள்ளது.

Post Views:
480