போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியமானது போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குறித்த இந்தியாவின் முதல் தரவுத்தளத்தை உருவாக்கி உள்ளது.
NIDAAN என்பதன் விரிவாக்கமானது போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பற்றிய தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம் ஆகும்.
நாட்டில் போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களை அமல்படுத்துவதற்காகப் பணி அமர்த்தப் பட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில வழக்குத் தொடுப்பு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இது தற்போது செயல்படுத்தப்படுகிறது.
இது போதைப்பொருள் ஒருங்கிணைப்பு நெறிமுறை (NCORD) தளத்தின் ஓர் அங்கம் ஆகும்.
இந்த இயங்குதளமானது பரிமாற்ற வசதி கொண்ட குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் இணையவழி சிறைச்சாலை செயலி (மேகக் கணிமை அடிப்படையிலானச் செயலி) களஞ்சியத்தில் இருந்து தரவுகளைப் பெறுகிறது.