TNPSC Thervupettagam

இந்தியாவில் அதிக வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

July 31 , 2026 2 days 18 0
  • ₹100 கோடி அல்லது அதற்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 142 ஆக இருந்த நிலையில், 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 576 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கான அதிகாரப்பூர்வ வருமான அடிப்படையிலான வரையறை இல்லாததால், வருமான வரிக் கணக்கு தாக்கல் (ITRs) தரவுகளின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
  • 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டு என்பது 2024-25 ஆம் நிதியாண்டில் (2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - 2025 ஆம் ஆண்டு மார்ச்) ஈட்டப்பட்ட வருமானத்தைக் குறிக்கிறது.
  • வருமானம் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியாவின் முதல் தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
  • குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின் (2023-24) படி, சமத்துவமின்மையின் அளவீடான ஜினி குறியீடு கிராமப்புறங்களில் 0.237 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.284 ஆகவும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்