TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டிற்குள் ஹெபடைடிஸ் நோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள்

July 31 , 2026 2 days 36 0
  • தேசிய வைரல் ஹெபடைடிஸ்/வைரஸால் ஏற்படும் கல்லீரல் அழற்சி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NVHCP) கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் வைரல் ஹெபடைடிஸை பொது சுகாதார அச்சுறுத்தலிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது.
  • ஹெபடைடிஸ் என்பது வைரஸ் தொற்றுகள், நச்சுப் பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களால் ஏற்படும் ஒரு கல்லீரல் அழற்சியாகும்.
  • ஹெபடைடிஸ் A, B, C, D and E ஆகியன ஐந்து முக்கிய ஹெபடைடிஸ் வைரஸ் வகைகளாகும் என்பதுடன் இதில் ஹெபடைடிஸ் B மற்றும் C கடுமையான நாள்பட்ட கல்லீரல் நோய்களை ஏற்படுத்துகின்றன.
  • ஹெபடைடிஸ் B மற்றும் C நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் படாவிட்டால், அவை கல்லீரல் சுருக்கம் மற்றும் முதன்மை கல்லீரல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும்.
  • தேசிய வைரல் ஹெபடைடிஸ்/வைரஸால் ஏற்படும் கல்லீரல் அழற்சி கட்டுப்பாட்டுத் திட்டம் ஆனது இந்தியா முழுவதும் ஹெபடைடிஸ் B மற்றும் C நோய்களுக்கான இலவச பரிசோதனை, நோயறிதல் மற்றும் வைரஸ் தடுப்பு சிகிச்சையை வழங்குகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் மலிவான விலையில் ஜெனரிக்/பொதுப் பெயர் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுவதுடன், மாவட்ட மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை இச்சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
  • இந்தியாவின் ஹெபடைடிஸ் ஒழிப்பு உத்தியானது 2030 ஆம் ஆண்டிற்குள் தொற்று நோய்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 3 (SDG 3.3) உடன் ஒத்துப் போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்