இந்தியாவில் தனது முதலீட்டினைத் தொடரும் வகையில், 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனியார் துறைக்கு சுமார் 1 பில்லியன் டாலர்களை நேரடி நிதி உதவியாக வழங்குவதாக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், தனியார் துறை செயல்பாடுகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், இறையாண்மைத் திட்டங்களுக்கு சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் ஆசிய மேம்பாட்டு வங்கி வழங்கியது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், மின்னணு-நகர்வு, பசுமைத் தரவு மையங்கள், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்த நிதியுதவி கவனம் செலுத்துகிறது.
உலகளாவிய இடையூறுகளால் அதிகரித்துள்ள வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி நிதியுதவியையும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆதரிக்கிறது.
இந்த நிதியுதவியானது இந்தியாவின் மேம்பாட்டு முன்னுரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.