இந்தியாவில் உள்ள 5 சதவீதப் பறவைகள் - வட்டார இனங்கள்
August 8 , 2023 769 days 434 0
இந்தியாவின் 75 வட்டாரப் பறவைகள் என்ற ஒரு சமீபத்திய அறிக்கையானது இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் 108வது நிறுவன தினத்தின் போது அந்த அமைப்பால் வெளியிடப் பட்டது.
அது இந்தியாவில் காணப் படும் சுமார் 5% பறவைகள் உள்நாட்டு (வட்டார) இனத்தைச் சேர்ந்தவை என்று கூறுகிறது.
எனினும் உலகின் பிற பகுதிகளில் அவை இருப்பதாகப் பதிவாகவில்லை.
75 இந்தியாவின் பறவை இனங்கள் எனப்படும் இந்த அறிக்கையானது சமீபத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் 108வது ஸ்தாபன நாளில் வெளியிடப் பட்டது.
இந்தியாவில் 1,353 பறவை இனங்கள் உள்ளன.
இது உலகிலுள்ள பறவை இனங்களில் தோராயமாக 12.4% ஆகும்.
இவற்றில் 78 (5%) இனங்கள் இந்தியாவில் மட்டுமே (வட்டார இனங்கள்) காணப் படுபவை ஆகும்.