இது 2022 ஆம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை பற்றிய அறிக்கையில் வெளியிடப் பட்டது.
இந்தியாவில் ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2019/ 2021 ஆம் ஆண்டில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 224.3 மில்லியனாக குறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 52.3 மில்லியனில் இருந்த 5 வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 36.1 மில்லியனாக குறைந்து உள்ளது.
2012 ஆம் ஆண்டில் மூன்று மில்லியனாக இருந்த ஐந்து வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 2012 ஆம் ஆண்டில் 2.2 மில்லியனாகக் குறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 11.2 மில்லியனாக இருந்த 5 மாதங்கள் வரையிலான தாய்ப்பால் வழங்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 14 மில்லியன் என்ற அளவினைத் தொட்டது.
2012 ஆம் ஆண்டில் 25.2 மில்லியனாக இருந்த 1.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பருமனான வயது வந்தோரின் எண்ணிக்கை என்பது 2016 ஆம் ஆண்டில் 34.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 171.5 மில்லியனாக இருந்த இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 15 முதல் 49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 187.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.