TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைத் தத்தெடுப்புகள் 2024-25

April 6 , 2025 25 days 85 0
  • 2024-25 ஆம் நிதியாண்டில் சுமார் 4,515 தத்தெடுப்புகளுடன் இந்தியாவில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தத்தெடுப்புகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
  • இந்த மொத்தக் குழந்தைத் தத்தெடுப்புகளில் சுமார் 3,950 உள்நாட்டுத் தத்தெடுப்புகள் மற்றும் 565 சர்வதேசத் தத்தெடுப்புகள் அடங்கும்.
  • இதன் முந்தைய அதிகபட்சப் பதிவானது 2012-13 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 4,354 தத்தெடுப்புகள் ஆகும்.
  • மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) ஆனது புதிதாக அடையாளம் காணப் பட்ட 8,598 குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான தகுதிக் குழுவில் சேர்த்தது.
  • கூடுதலாக, தத்தெடுப்புச் செயல்முறையை மிக நன்குச் சீராக்க மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து 245 புதிய தத்தெடுப்பு முகமைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • CARA ஆணையத்தின் படி, தற்போது தத்தெடுப்பை எதிர்நோக்கி சுமார் 33,000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சுமார் 2,141 குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வமாகத் தத்தெடுப்புக்குக் கிடைக்கப் பெறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்