TNPSC Thervupettagam

இந்தியாவில் சில்லறை வணிக பணவீக்கம் - மார்ச் 2026

April 16 , 2026 12 hrs 0 min 15 0
  • சில்லறைப் பணவீக்கம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக இருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3.4% ஆக அதிகரித்துள்ளது.
  • இது குடும்பங்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் லேசான உயர்வைக் காட்டுகிறது.
  • நுகர்வோர் விலை குறியீட்டைப் (CPI) பயன்படுத்தி அளவிடப்படும், இதில் உணவு, எரிபொருள், வீட்டுவசதி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் போன்ற பொருட்கள் அடங்கும்.
  • குறிப்பாக காய்கறிகள், தேங்காய் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற சில விலை மதிப்பற்ற பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட அதிக உணவுப் பண வீக்கமே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
  • 2024 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய CPI தொடரை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு தற்போதைய நுகர்வு முறைகளை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
  • மேற்காசியாவில் நிலவும் பதட்டங்கள் போன்ற உலகளாவிய காரணிகளும் விநியோகச் சங்கிலிகளைப் பாதித்து போக்குவரத்து மற்றும் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளன.
  • உயர்வு இருந்த போதிலும், பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பிற்குள் (4% ± 2%) உள்ளதுடன்  இது பணவீக்கம் மிதமாகவும் கட்டுப்பாட்டிலும் இருப்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்