மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உலகத் தரம் வாய்ந்த தேன் பரிசோதனை ஆய்வகத்தைத் திறந்து வைத்து உள்ளார்.
இது இந்தியாவில் முதலாவது அரசு தேன் பரிசோதனை ஆய்வகமாகக் கருதப் படுகின்றது.
இந்தப் பரிசோதனை ஆய்வகமானது தேசிய தேனீ வாரியத்தின் (NBB - National Bee Board) உதவியுடன் தேசியப் பால்வள வளர்ச்சி வாரியத்தினால் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய தேனீ வளர்ப்புத் திட்டம் ஆகியவை NBB மற்றும் மாநிலங்களின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது.