மாநில சட்டமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல் மற்றும் கலைத்தல் குறித்த ஆளுநரின் அதிகாரமானது அமைச்சரவையின் அறிவுரைப்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், அவரது சொந்த முடிவில் செயல்படக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது.
இது 2016 ஆம் ஆண்டில் நபம் ரெபியா எதிர் துணை சபாநாயகர் என்ற ஒரு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாகும்.
எனினும் அமைச்சரவையானது சட்டமன்றத்தில் நம்பிக்கையை இழந்து விட்டது என்று ஆளுநர் கருதினால், அவர் முதலமைச்சரைச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரலாம் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பின் சரத்து 163 மற்றும் சரத்து 174 ஆகியவை மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான ஆளுநரின் அதிகாரத்துடன் தொடர்புடையவை ஆகும்.