TNPSC Thervupettagam

இந்தியாவில் பட்டினி நிலை

July 30 , 2026 3 days 86 0
  • கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா தனது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களின் எண்ணிக்கையை 42% குறைத்துள்ளது என்பதோடு இது பட்டினிக்கு எதிரான அதன் போராட்டத்தில் உலகளாவியப் போக்குகளை விஞ்சியுள்ளது.
  • ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள இந்தியர்களின் பங்கு 2004-06 ஆம் ஆண்டில் 21.1% ஆக இருந்து, 2023-25 ஆம் ஆண்டில் 9.8% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
  • மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர்—520.1 மில்லியன் மக்கள் (35.5%)—தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.
  • இந்தியாவில் ஆரோக்கியமான உணவின் விலை ஆறு ஆண்டுகளில் 3 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • தெற்காசியாவில், பாகிஸ்தானைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் ஆரோக்கியமான உணவின் விலை இந்தியாவில் மிகக் குறைவாக இருந்தது.
  • ஆசியாவின் மற்ற பகுதிகளில், சீனாவில் இந்த விலை குறைவாகவும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மிக அதிகமாகவும் இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்