இந்தியத் தேர்தல் ஆணையமானது புதுடெல்லியில் சர்வதேச வலையரங்கம் ஒன்றை நடத்தியது.
“பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் ஆகியோரின் தேர்தல் பங்கேற்பினை அதிகரித்தல் : சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் போன்றவற்றைப் பகிர்தல்” என்ற கருத்துருவுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
70 ஆண்டுகள் மற்றும் 17 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதில் பெண்களின் பங்கானது ஆண்களை விட அதிகமாகி உள்ளது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா இந்த வலையரங்கில் (webinar) குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு 67 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
1962 ஆம் ஆண்டில் –16.71% ஆக இருந்த பாலின இடைவெளி 2019 ஆம் ஆண்டில் +0.17 என்ற அளவில் மாறியுள்ளது.
1971 ஆம் ஆண்டு தேர்தல் முதல் கொண்டு இந்தியாவின் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 235.72% ஆக அதிகரித்துள்ளது.