டெல்லி அரசானது பாகிஸ்தானிலுள்ள கர்தாபூர் சாஹிப் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவற்றை ‘முக்கிய மந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்ற தனது யாத்திரைத் திட்டத்தில் சேர்ப்பதாக அறிவித்தது.
ஏற்கனவே உள்ள 13 யாத்திரை வழித்தடங்களைத் தவிர, அதில் மேலும் இரண்டு வழித் தடங்களைச் சேர்ப்பதற்கு டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
அந்த இரண்டு வழித்தடங்களாவன : டெல்லி-வேளாங்கண்ணி-டெல்லி மற்றும் டெல்லி-கர்தாபூர் சாகிப்-டெல்லி ஆகும்.
பக்தர்கள் டெல்லி-வேளாங்கண்ணி-டெல்லி வழித்தடத்தில் AC-III என்ற ஒரு இரயில் பெட்டியில் பயணிப்பர்.
கர்தாபூர் சாகிப் பகுதிக்கு, பயணிகள் குளிர்சாதன வசதி பெற்ற ஒரு பேருந்தில் பயணிப்பர்.