TNPSC Thervupettagam

பல்பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கை

November 30 , 2021 1366 days 633 0
  • பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியன இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
  • இது நிதி ஆயோக்கின் முதலாவது பல்பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • பீகாரில் வாழும் 51.91 சதவீதத்தினர் ஏழ்மையானவர்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (42.16%), மற்றும் உத்தரப் பிரதேசம் (37.79%) ஆகியவை உள்ளன.
  • ஏழ்மையில் முதலில் உள்ள 5 மாநிலங்கள் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகியனவாகும்.
  • அதே சமயத்தில் கேரளா (0.71  சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஏழ்மை குறைவாக உள்ள 5 மாநிலங்கள் ஆகும்.
  • இந்தக் குறியீட்டின் படி நாடு முழுவதும் சுழிய அளவில் வறுமையினைப் பதிவு செய்த ஒரே மாவட்டம் கேரளாவின் கோட்டயம் ஆகும்.
  • பீகார் மாநிலம் அதிக ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கொண்டுள்ள மக்களைக் கொண்ட ஒரு மாநிலமாகவும் உள்ளது.
  • இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்