இந்தியாவில் பெண்கள், தனியார் துறையின் மூன்று தொடக்க நிலைப் பணிகளில் ஒன்றை மட்டுமே வகிக்கின்றனர் மற்றும் உயர்மட்ட/நிர்வாகப் பதவிகளில் 24 சதவீதப் பதவிகளை மட்டுமே வகிக்கின்றனர்.
இந்தியாவில் பாலின ஏற்றத்தாழ்வு என்பது தொடக்க நிலையில் ஏழு ஆண்டுகள் வயது வித்தியாசத்துடன் உள்ள நிலையில் அதாவது ஒரு தொடக்க நிலைப் பதவியில் உள்ள 32 வயதிலான ஆண்களுடன் ஒப்பிடும் போது அதே பதவியிலுள்ள பெண்களின் வயது சராசரியாக 39 ஆக உள்ளது.
தொடக்க நிலையில் ஒரு ஆண் அதே நிலைப் பணியில் இருக்கும் பெண்ணை விட உயர்மட்ட/நிர்வாகப் பதவிக்குப் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு என்பது 2.4 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஆண்களை விட பெண்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறச் செய்வதற்கான வாய்ப்பு 1.3 மடங்கு அதிகமாக உள்ளது.