மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் 1981 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருந்தது.
1982 ஆம் ஆண்டில், ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான சுசுகி, மாருதி நிறுவனத்துடன் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கியது.
இது நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்த சமயத்தில், குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மின்சார வாகன மின்கல அடுக்குகள் தயாரிப்பு ஆலையையும், ஹரியானாவின் கார்கோடாவில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் வாகனத் தயாரிப்பு ஆலையையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.