TNPSC Thervupettagam

இந்தியாவில் மின்சார வாகனங்கள்

December 18 , 2021 1325 days 741 0
  • மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் மின்சார வாகனங்களின் நிலை பற்றி மாநிலங்களவையில் எடுத்துரைத்தார்.
  • இந்தத் தகவல்களின்படி, பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
  • இந்தியாவின் மத்திய அரசானது மின்சார வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மீதான சரக்கு & சேவை வரியினைக் குறைத்துள்ளது.
    • மின்சார வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி : 5%  (முன்பு 12%)
    • மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள் & மின்னேற்ற நிலையங்கள் மீதான சரக்கு & சேவை வரி : 5% (முன்பு 18%)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்