மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கோவாவின் பனாஜி என்னுமிடத்தில் 7வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவினைத் தொடங்கி வைத்தார்.
இந்த 4 நாட்கள் அளவிலான திருவிழாவின் கருத்துரு,” ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் – வளமான இந்தியாவிற்காக புதுமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தினைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
முதலாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது டெல்லியின் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டினை மக்களிடம் கொண்டு செல்வதும் அறிவியல் தொழில்நுட்பத்தை மக்களிடம் மலிவு விலையில் கொண்டு செல்வதுமே இந்தத் திருவிழாவின் ஒரு முக்கிய நோக்கமாகும்.