இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் நுண் கட்டமைப்புத் திட்டம்
December 18 , 2021 1325 days 687 0
அரசிற்குச் சொந்தமான தேசிய அனல்மின் கழகமானது ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் நுண் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இத்திட்டமானது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தேசிய அனல்மின் கழகத்தின் விசாகப் பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரி ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது.
சிம்ஹாத்ரி தேசிய அனல்மின் கழக ஆலையில் “மின்னாற் பகுப்பியைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யத் திட்டமிடுவதோடு, தனிப்பட்ட ஒரு எரிபொருள் செல் அடிப்படையிலான நுண்கட்டமைப்பினை உருவாக்குவதில் தேசிய அனல்மின் கழகம் ஈடுபடும்.