இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி சாரா நிதி நிறுவனங்களை உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பின் கீழ், மூலதன நிறைவு விகிதம், வாராக் கடன்கள் மற்றும் முதல் கட்ட மூலதனம் போன்ற பரிமாணங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருக்கும் போது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும்.
வங்கிகள் ஏற்கனவே இந்தக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தக் கட்டமைப்பு நிரந்தர வைப்பு நிதிகளைப் பெறும் அனைத்து வங்கி சாரா நிதியியல் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
எனினும் இது அரசிற்குச் சொந்தமான வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிதி நிறுவனங்கள், முதன்மை வழங்குநர்கள் மற்றும் மேல், இடை மற்றும் உயர் அடுக்குகளில் நிரந்தர வைப்பு நிதிகளைப் பெறாத வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தன் வரம்பிற்குள் கொண்டிருக்காது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் செயல்படுத்தப்படும்.
இது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் அதன் பின்பும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிதிநிலையைப் பொறுத்துச் செயல்படுத்தப்படும்.