பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்
December 17 , 2021 1327 days 570 0
பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கும் பணிகளைத் தொடங்கச் செய்யுமாறு, மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரது தொழிலைக் கருத்தில் கொள்ளாமல் அடிப்படை உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.
தர்பார் மஹிளா சாமான்வயா குழு என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக் காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் எதிர் கொண்ட சில பிரச்சினைகளை இந்த மனு முன்வைத்தது.