TNPSC Thervupettagam

இந்தியாவில் ஸ்புட்நிக் V

May 16 , 2021 1519 days 718 0
  • இந்தியாவில் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தினை அறிமுகப்படுத்துவதாக Dr. ரெட்டிஸ் ஆய்வகமானது அறிவித்துள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்தானது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு Dr. ரெட்டிஸ் ஆய்வகத்தினால் விநியோகிக்கப்படுகிறது.
  • தற்போது, ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது நாட்டின் இரண்டாவது விலையுயர்ந்த கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
  • ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் ஒரு தவணை மருந்தளவின் (Dosage) விலை ரூ.995 ஆகும்.
  • கோவிசீல்டினுடைய ஒரு தவணை மருந்தளவின் விலையானது ரூ.400 ஆகும்.
  • சமீபத்தில் இதன் விலையானது ஒரு தவணைக்கு ரூ.300 ஆக குறைக்கப்பட்டது
  • இந்த மருந்தினை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா எனும் நிறுவனமானது உள்நாட்டிலேயே தயாரிக்கிறது.
  • கோவாக்சின் தடுப்பு மருந்தானது மாநில அரசுகளிடம் ஒரு தவணைக்கு ரூ.600 என்ற விலையிலும் தனியார் மருத்துவமனைகளிடம் ஒரு தவணைக்கு ரூ.1200 என்ற விலையிலும் வழங்கப் படுகிறது.

ஸ்புட்நிக் V பற்றிய தகவல்கள்

  • ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது மாஸ்கோவிலுள்ள காம்லியா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
  • இது இரண்டு தவணை (Dose) தடுப்பூசியாகும்.
  • இருப்பினும் ரஷ்யாவில் ஒற்றைத் தவணை ஸ்புட்நிக் V தடுப்பு மருந்து சமீபத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது ஸ்புட்நிக் லைட் ஒற்றைத் தவணை தடுப்பு மருந்து என அழைக்கப்படுகிறது.
  • இந்திய நாடானது ஸ்புட்நிக் V இரட்டைத் தவணை தடுப்பு மருந்தினையே தற்போது வழங்குகிறது.
  • ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது வெவ்வேறு மனித அடினோ வைரஸ்களை (Human Adenoviruses) பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த தடுப்பு மருந்தின் செயல்திறன் 91% ஆகும்.
  • ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் முதல் தவணையானது ஹைதராபாத்தில் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்