மும்பையில் நடைபெற்ற தி இந்து பிசினஸ்லைன் நிகழ்வில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO)ஆண்டின் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு (புதுமையான சமூக நடவடிக்கையாளர்) என்ற விருதை வென்றது.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் சிந்தூர் நடவடிக்கையின் போது DRDO அமைப்பின் உத்தி சார் தொழில்நுட்பப் பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப் பட்டது.
டிஜிட்டல் பரிமாற்ற விருதுகள் ஆனது, 20 மில்லியன் தினசரி கோரிக்கைகளைக் கையாளும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அரசாங்க மொழிபெயர்ப்பு தளமான பாஷினிக்கு வழங்கப்பட்டது.
1,300க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து கல்வி மற்றும் சுகாதாரத்தில் பணியாற்றியதற்காக அசிம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு விருது வழங்கப்பட்டது.