சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 31வது டாக்டர் M.S. சுவாமிநாதன் விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன.
மைசூருவைச் சேர்ந்த சகஜா சம்ருதா சமூக அடிப்படையிலான பல்லுயிர்ப் பெருக்க முன்னெடுப்புகள் மூலம் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் சிறு தானியங்களைப் பாதுகாத்ததற்காக இந்த விருதைப் பெற்றார்.
கலைஞர் நகரைச் சேர்ந்த இருளர் மீனவரான வீரப்பன், சேற்று நண்டு இனப்பெருக்கம் மற்றும் நிலையான மீன்வளர்ப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்ததற்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.